பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லை. இடுகாடு வரையில் அரசு வருவது, குமுகாயத்தின் பொறுப்புணர்வைக் குறைக்கும்.

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.’

43

1) முன்னோர்: இன்று அறிவராக வாழ்வோர், தென்திசை நோக்கியும் தங்கியும் அறிவுரைகள் வழங்கி வாழ்விக்கும் நல்லறிஞர்கள் ஆகியோரைத் தென்புலத்தார் என்றல் தவறன்று.

தமது குடியில், தமது குடியின் மேம்பாட்டுக்காக வாழ்ந்து மறைந்து போனவர்களை நினைவு கூர்தல்; அவர்கள் நினைவு பசுமையாக விளங்க, அவர்கள் விரும்பி மேற்கொண்டு செய்த அறங்களை நினைவு கூர்ந்து செய்தல்; அவ்வறங்களை வாழ்த்துதல்; இதுவே நீத்தார் வழிபாடு. மற்றச் சடங்குகள் பயனற்றவை; பொருளற்றவை.

2) கடவுளை வணங்குதல்; கடவுட் கோயிலைப் பேணுதல். இதனால் அறிவு, ஆள்வினை வளர்த்து ஞானம் வரும். கடவுட் கோயில் வளர்வதன் மூலம் குமுகாய இணக்கங்கள் ஏற்படும்; குமுகாயம் மேம்பாடுறும்.

3) நாடு விட்டு நாடு காணும் இயல்பினராக - அந்தணராக வரும் புதியவர்கள், விருந்தினர்கள். இவர்களை வரவேற்று ஊண், உடை முதலியன வழங்கிப் பேணுதல். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும்.

4) ஒக்கல்: சுற்றம், சுற்றம் என்பது இல்வாழ்க்கைத் தலைமகனது உடன் சுற்றமாகும். அதாவது தன் உடன் பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், மனைவி வழி உடன் பிறப்புச் சுற்றம்.

சுற்றத்தினரைப் பேணுதல் குடும்பம் வளமையாக அமையத் துணை செய்யும். சுற்றத்தினரைப் பேணுதல்