பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



43



1. இல்லத்தாட்சிப் பொறுப்புள்ளவள் அனைத்தையும் வரும் முன்பே உரிய காலத்திலேயே திட்டமிட்டுத் தேடிப் பாதுகாத்துத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.

2. உணவுப் பொருள்களை உரிய பருவக் காலங்களில் சேகரித்தால் விலை குறைவு, அவ்வப்பொழுது தேடும் உழைப்பும் மிஞ்சும்.

3. ஒரு வீடு பலர் வாழ்வது; ஆதலால், யாருக்காவது எப்போதாவது உடல்நலமில்லாது போகலாம். அதற்குரிய முதல் உதவி மருந்துப் பொருள்கள் இல்லத்தில் இருக்கவேண்டும்.

4. தம் மக்கட் செல்வங்களின் கல்வி, திருமணம் முதலிய நிகழ்வுகளுக்குரிய பொருள்களை உரிய காலத்திலேயே திட்டமிட்டுச் சேகரித்து வைத்து அவை வரும் பொழுது கடன் படாமலும், பெருமூச்சைச் செலவழிக்காமலும் செய்தல் வேண்டும்.

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.’

54

ஒருவன் அடையக் கூடிய பேறுகளில் இல்லாளின் மேம்பட்ட பொருள் யாது? அவள் உறுதியான கற்பினைப் பெறின்.

பெண் பெருமையுடையவள். வாழ்க்கைத் துணையாகிய இல்லாளே பெறக் கூடிய பெரும்பேறு அவளிடம் கற்பென்ற உறுதி இருக்குமாயின்!

ஒருவனின் உடல் தேவைகளையும் உயிர்த் தேவைகளையும் உணர்வுத் தேவைகளையும் அறிந்து, கடப் பாட்டுணர்வுடன் காலத்தால் வழங்கி வாழ்விப்பவள் இல்லாள். ஆதலால் சிறப்புடைய பேறு.