பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீயைக் கொண்டு இலங்கை எழில்களை அழித்துவிட்டு இராமனிடம் மீண்டான். இராமனிடம் மீண்ட அனுமன் இராமன் முன்னிலையில் சீதையிருந்த திசை நோக்கித் தொழுதான்.

எய்தினன் அனுமனும் எய்தி, ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிதுஇறைஞ்சி வாழ்த்தினான்.

(கம்பன்-6028)

என்று பேசுவான் கம்பன். மேலும் சீதையின் கற்புநிலையை உறுதிப்படுத்த அனுமன், ‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்றும்,

“திண்டிலன் என்னும் வாய்மை
திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது, அனந்தன் உச்சி
கிழிந்திலது எழுந்து வேலை
மீண்டில; சுடர்கள் யாவும்
விழுந்தில; வேதம் செய்கை
மாண்டிலது-என்னும் தன்மை
வாய்மையால் உணர்தி மன்னோ!”

(கம்பன்-6039)

என்றும் கூறுகின்றான். இராமனும் அனுமனின் நடத்தையாலும் வாக்கினாலும் இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று, என்று தெளிந்தனன்.

தாடகை வதம்

கம்பனின் இராமகாதையில் இரண்டு சிறு போர்களும் ஒரு பெரும் போரும் நடைபெறுகின்றன. முதற்போர் தாடகையுடன் நடத்திய போர். தாடகை உருவத்தால் பெண். ஆனால்-