பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

145


போதாது. அந்தப் பணம் வருகிறபோது "வேர்வை நாற்றம்" வீசுகிறதா? என்று பார்க்க வேண்டும். உழைப்பால் வந்த பணம் என்றால் அந்தப் பணத்தில் வேர்வை நாற்றம் இருக்கும். அது இல்லையென்றால் சலவை சலவையாகக் கத்தை கத்தையாக இருக்கும். இதுதான் இந்த நாட்டுச் சமுதாய அமைப்பு. இதைத்தான் திருவள்ளுவர், "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்” என்று சொன்னார். அந்தக் கனவு நினைவாகவில்லை!

பாரதி இதை மிக்க நயமாகச் சொல்கிறான். பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் கர்த்தா என்று பேசப்படுகின்ற காரல் மார்க்சை, மாமுனிவர் என்பார் தமிழ்த் தந்தை திரு. வி. க. காரல்மார்க்சு "மூலதனம்" என்ற தத்துவ நூலில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் மார்க்சு பல பக்கங்களில் எழுதியதை சிலசில வரிகளில் இலகுவாகப் பேசிவிட்டுப் போகிறார் பாரதி.

இந்தப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவம் உழைப்பு, கூலி, உபரி விகிதங்கள் என்பதுதான். ஒருவன் உழைக்கின்ற அளவுக்குக் கூலி பெறாது போனால் உழைக்கின்றவன் இளைக்கின்றான். உழைப்பை விலைக்கு வாங்குகிறவன் உயர்ந்து போகிறான். இது அவர் தத்துவத்தின் அச்சாணி. பாரதி எவ்வளவு இலகுவாகப் பேசுகிறான்!

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?”

என்கிறான். ஒருவன் உழைக்கின்றான். அவனுடைய உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்க வேண்டும். ஓர் உழைப்பாளி காலை நேரத்தில் விறகு வெட்ட வருகிறான். வேலை வாங்குகிறவன் கேட்கிறான் "என்ன கேட்கிறாய்?” என்று. "ஐயா, ஐந்து ரூபாய் கொடுங்கள்" என்கிறான் உழைப்பாளி: அவருக்குக் கொடுக்க மனமில்லை. நாம் நவீன