பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"இன்னா தம்மஇவ் வுலகம் இனியகாண்க
இதன் இயல்புணர்ந் தோரே!”

என்று சொன்னான்.

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டுக்குப் பதவுரை கிடைத்தது; பொழிப்புரை கிடைத்தது; இலக்கணவுரை கிடைத்தது; விரிவுரை கிடைத்தது; செயலுருவம் மட்டுமே கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்துப் பத்தாம் நூற்றாண்டில் சுந்தரர் அவிநாசியில் கேட்கிறார். ஒரு வீட்டிலே மகிழ்ச்சி, ஒரு வீட்டிலே துன்பம் ஏன்? என்று கேட்கிறார்.

பத்தாம் நூற்றாண்டிலே கேட்கப்பட்ட கேள்விக்கும் இதுவரையில் விடை காணவில்லை. ஆக, ஒரு வீட்டில் மகிழ்ச்சி ஒரு வீட்டில் துன்பம் என்ற சமுதாயப் பொருத்தப் பாடில்லாத நியதிகளைத் தமிழ் நெஞ்சங்கள் உடன்படாமல் எதிர்த்திருக்கின்றன. ஆனால் இந்த நாட்டில் புரட்சி தோன்றவில்லை!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.


பணத்தில் வேர்வை நாற்றம் இருக்கிறதா?


என்னுடைய தகுதிக்கு என்னுடைய ஆற்றலுக்கு ஏற்ப உழைத்துச் சம்பாதித்து வாழ்வதில் யாதொரு தடையும் இல்லை. நுகர்வுக்கு எல்லைகிடையாது. நம்முடைய இலக்கியம் "அருளோடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்” என்கிறது.

அருளோடும், அன்போடும் பொருள் வரவேண்டும். வருகிற பணத்தைப் பெட்டியில் எண்ணி வைத்தால் மட்டும்