பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

159


அதனால்தான் இறைவன்கூட மண்ணுக்கு வந்தபோது, திருக்கோயில்களுக்கு, திருமடங்களுக்குச் சென்ற் தடவைகளைவிட, வீடுகளுக்குச் சென்ற தடவைகள் மிகுதி. காரணம் அவ்வளவு சிறப்பாக அந்த வீடுகள் இருந்தன. மீண்டும் கலை பயில் வீடுகளை உருவாக்க வேண்டும். அத்தகைய வீடுகள் உண்டானால் நாடு ஓர் அமைதியான சமூக மாற்றத்தை உண்டாக்கும். இந்தத் துறையிலும்கூட பாரதியின் கனவு நனவாகவில்லை.


பெண் விடுதலை



அடுத்து மகளிர் சிலரே இலக்கியக் கூட்டத்திற்கும் பொதுக் கூட்டத்திற்கும் வருகிறார்கள். நாடு அந்த வகையில் எவ்வளவு விழிப்படைந்திருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் அளவு கோல். இது பாரதியின் விழா. ஆனால், எண்ணிக்கை யில் மிகச் சிலரே வந்திருக்கிறார்கள், மகளிர். நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில் பெண்களின் விடுதலை, பாரதியின் வழியில் கன்வாகத்தான் இருக்கிறதே தவிர நனவாகவில்லை.

நாம் பார்க்கிறோம். திங்களுக்கு ஒரு செய்தியாவது தவறாமல் வந்து கொண்டிருக்கிறது. பெண்கள், கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்; தீயிலிட்டுக் கொளுத்தப்படுகிறார்கள்; அடித்துச் சித்திரவதைச் செய்யப்படுகிறார்கள் என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். ஏதோ விலைவாசிகள் கட்டுப் படியாகவில்லை என்பதனால் அவர்களும் சம்பாதிக் கட்டுமே என்று வேலைக்கு அனுப்புகிறோமே தவிர, அந்த வேலைக்கு வந்ததினாலேயே அவர்களுடைய உரிமைகள் வந்ததாகச் சொல்ல முடியாது.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரட்டிப்பு உழைப்பை அவர்கள் செலுத்த வேண்டியதிருக்கிறது. வெளியிலும் சென்று எட்டு மணி நேரம் வேலை பார்த்துச் சம்பாதிக்க வேண்டியதிருக்கிறது. வீட்டிற்கு வந்த பிறகும்