பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்க வேண்டிய திருக்கிறது. எந்தக் குடும்பத் தலைவனும் அந்த வீட்டு வேலையில் பங்கெடுத்துக் கொள்வதாக எனக்குத் தெரிந்து தகவல் இல்லை.

நான் சோவியத் நாட்டிற்குச் சென்றிருந்தபோது ஒரு சுவையான நிகழ்ச்சி. தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர்; அவர் மனைவி மருத்துவத்துறை இயக்குநர். இரண்டு பேரும் ஒப்பற்ற பெரிய பதவிகளில் இருந்தார்கள். நான், "இரண்டுபேரும் இவ்வளவு பெரிய பதவிகளில் இருக்கின்றீர்களே உங்களுடைய வீடு எப்படி?” என்று கேட்டேன். "எங்களில் யார் முன்னால் வீட்டுக்குச் செல்கிறோமோ அவர்கள் சமைக்க ஆரம்பித்து விடுவோம். நான் முதலில் சென்றால் அடுப்பைப் பற்ற வைத்துச் சமைத்துக் கொண்டிருப்பேன். என் மனைவி வந்து என்னுடன் சேர்ந்து கொள்வாள். சேர முடியாது போனால் சமைத்து முடித்துக் காத்துக் கொண்டிருப்பேன். நான் சமைத்ததை அன்று மனைவி பிரியமாகச் சாப்பிடுவாள்' என்று துணைவேந்தர் சொன்னார்.

ஆனால், நம்முடைய நாட்டிலே என்ன நிகழ்கிறது? என்று சொன்னால் இவர் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஓய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு, தினத்தாளைப் புரட்டிக்கொண்டு, காப்பி தயாராகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டேயிருப்பாரே தவிர கூடப் போய் கொஞ்சம் வேலை செய்வது என்பதில்லை.

அதைவிட மிகக்கொடுமை, ஆணின் மகிழ்ச்சிக்காக - களிப்புக்காக - வாழ்க்கைத் துணைக்காக அமைகின்ற வாழ்க்கைத் துணையைத் தேடுகின்ற துறையில் கூட, பெண்ணிடத்தில் பணம் கேட்கின்ற அளவுக்குச் சமுதாயம் சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதைப் பார்க்கிறோம். திருமணத்தினால் அவளுக்குக் கிடைக்கிற பயனைவிட அவனுக்குத்