இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எந்த அடிகள் பெருமானின் அடிச்சுவட்டில் நடக்க நான் ஆசைப்பட்டேனோ, அந்த மாமேதையின் நூலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பைப் பெறற்கரிய பேறாக எண்ணுகின்றேன். இந்த நல்வாய்ப்பை நல்கிய என் கெழுதகை நண்பர் பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன் அவர்களுக்குப் பெருநன்றி உரைக்கின்றேன்.
அடிகளாரின் மேதக்க சிந்தனைகளைத் தொகுத்துத் தரும் பயனார்ந்த பணிக்குத் திட்டமிட்டு ஆணை பிறப்பித்த தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு பணிந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிகளார் நினைவுக்குக் குன்றக்குடியில் மணிமண்டபம் உண்டு. இந்த நூல்வரிசை அடிகளார் நினைவுக்கு அழகுற எடுத்த இலக்கிய மண்டபம்.
சிற்பி பாலசுப்பிரமணியம்