பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

243


சுதந்திரப் போராட்டத்தில் கணக்கற்ற சந்நியாசிகள், ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

பாரதி, சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தைப் போற்றுகிறான். "சந்நியாசிகள், ஞானிகள் லெளகீக முயற்சியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாவதன் முகாந்திரம் என்ன என்று பலர் ஆச்சரியமடைகின்றனர். அப்படி வியப்படைபவர்கள் கிருஷ்ணபகவான், வேதவியாசர், இராமதாஸ் முதலியவர்களின் சேவைகளைக் கவனிக்க வேண்டும்.

ஞானி, தனது சொந்த நலனைக் கருதி உழைக்கக் கூடாதே ஒழிய, உலக தர்மங்களை முற்றிலும் விட்டு விட வேண்டும் என்பது சாத்திரக் கருத்தன்று.

தன்மட்டில் யாதொரு பயனையும் கருதாமல் ஈசனுக்கும், ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செயல்களின் பலன்களை ஸமர்ப்பணம் செய்து விட்டு, தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்”-என்று எழுதுகிறான் பாரதி.

இத்தகைய சந்நியாசிகள், ஞானிகள் போற்றத்தக்கவர்கள். இவர்களால் நாட்டின் வரலாறு நனி சிறக்கும். பாரதி ஆண்மை, வீரயம், போராட்டம், யுகப்புரட்சி என்றெல்லாம் எழுதினாலும் மெளனத்தையும் வரவேற்கிறான். ஆனால் பாரதி வரவேற்கும் மெளனம், வலிமை சார்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊக்கம் இல்லாதவர்களே சப்தம் போடுவார்கள்; இரைச்சல் செய்வார்கள். ஆழமில்லாத கடற் பகுதியே அலைகளால் ஆர்ப்பரிக்கும். ஆழ்கடல் மோனத் தவம் செய்து முத்தைக் கொழிக்கும்.

நல்ல முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கைக்குத் தங்களைத் தாங்களே ஆராய்ந்து நிறை - குறை கண்டு, திருத்தங்கள் காண்பது அவசியம். ஆனால், ஒருவழிப்படாத அசுத்தமான