பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாயத்தின் வாழ்க்கைைையக் களமாகக் கொண்டு சில இலக்கியங்கள் தோன்றின. தமிழர் சமுதாயத்தை நெடுந்துரப் பார்வையில் இயக்கிய சமுதாய விஞ்ஞானிகளாகப் பல தமிழ்க் கவிஞர்கள் விளங்கியுள்ளனர்; முன்னேறிச் செல்லும் சமுதாயத்திற்குக் கருத்துக்களைத் தந்துள்ளனர். ஆனால் அக்கருத்துககள் வாழ்வாக மலராமை காரணமாகப் பல சமயங்கள் பல்லவி, அனுபல்லவியாக அமைந்துவிட்டது என்பது உண்மை. அனுபல்லவியானாலும் ஆலாபனத்தில் வேற்றுமையிருக்கும். அதாவது விசைமிக்குடைய சொற்கள் வந்து வீழும்.


பாவேந்தன் பாரதிதாசன்

நம்முடைய தலைமுறையில் தோன்றியவர் பாவேந்தன் பாரதிதாசன். அவன் புரட்சிக் கவிஞன். ஆற்றல் மிக்குடைய படைப்பாளன், தமிழையே உயிரெனக் கொண்டுலாவிய ஏந்தல்; ஆயினும் விரிந்த உலக பார்வை கொண்டவன்; பொதுவுடைமைச் சமுாயத்திற்குப் பாடிய கவிஞன், உழைப்பாளர் உலகத்திற்குப் புகழ்ப்பரணி பாடியவன். பாவேந்தன் கவிதைகள் எளிய நடையில் இன்பத் தமிழாக அமைந்தன! பாவேந்தன் கவிதைகள் எழுச்சியைத் தருவன. ஆற்றல்மிக்க தூண்டுதல்களாகப் பாவேந்தன் கவிதைகள் விளங்கின. விளங்கிக் கொண்டிருக்கின்றன. கவிஞனின் கவிதைகள் தூணியிலிருந்து புறப்படும் அம்புபோல் சென்று தைக்கும் தகைமையின. கவிதைகளின் பொருள்கள் வெளிப்படையானவை. நமது நூற்றாண்டில் நாம் கிண்ட மாபெரும் கவிஞன் பாவேந்தன் பாரதிதாசன். பாவேந்தனுக்கும் நூற்றாண்டு விழா வந்துவிட்டது. ஆனால், பாவேந்தன் பாரதிதாசன் கொள்கைகளில் யாதொன்றும் தமிழினத்தை வென்றெடுக்கவில்லை. கொள்கைகள் உயர்ந்து விளங்கி என்ன பயன், தத்துவங்களுக்குரிய பெருமையே அவை செயற்பாட்டுக்கு உரியனவாக அமைவதுதான்!