பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொடுமையைத் தவிர்த்தல் ஆகியன பொதுமை நெறியின் வாழ்க்கை முறைகள் என்பதனைப் பாவேந்தன்.

"இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது என'தென் னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்"

(பாரதிதாசன் கவிதைகள்-1 "புதியதோர் உலகு செய்வோம்’-3 பக்.58)


என்று புதியதோர் உலகைப் படைக்கச் சொல்லி ஆணையிட்டான்! இந்த ஆணை நமது இதயக் கதவுகளைத் திறக்குமா? புதிய உலகு படைப்போமா?


உடைமையைப் பொதுமைசெய்

பாவேந்தன். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்தான். ஏன், பொதுவுடைமைச் சமுதாயத்தை வரவேற்றுப் பாடினான். மனித குலத்தில் தனியுடைமைச் சமுதாய அமைப்புத் தோன்றியதிலிருந்தே சுரண்டல் அமைப்புடைய பொருளாதார அமைப்புத் தோன்றிவிட்டது. உலகையே இயக்கி வளமும் வரலாறும் படைத்த மனித உழைப்பு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பெற்று, அற்பக் கூலிக்கு விற்கப்படும் பொருளாகிவிட்டது. உழைப்பாளி தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்கும் உரிமையைப் பெற்றானில்லை. இத்தகு சுரண்டல் முறைப் பொருளாதாரத்தால் உழைப்பாளிகள் ஏழைகள் ஆனார்கள், உழைப்பாளிகளைச் சுரண்டிச் சேர்த்த உடைமைக்காரர்கள் தண்ணிர் நிறைந்த தொட்டியைப் போல ஆனார்கள். வறுமையும் சுரண்டப்படும் பொருளாயிற்று. ஏழ்மையை அறவே ஒழிக்க முடியும் என்ற கருத்தில் பாவேந்தனுக்கு முற்றிலும் உடன்பாடில்லை. 2-5-60-ல் எழுதிய கட்டுரையில் இதை விவரித்து எழுதியுள்ளான். இந்தக் கட்டுரை நமது கருத்தை மறுத்து எழுதப்பட்டது என்பதையும் நினைவுகூர்ந்து மகிழ்கின்றோம். நமது கருத்து கவிஞருக்குக் கிடைத்தது செய்தித்தாள் வழியேயாம். செய்தித்தாள் வழியாக செய்தி-