பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உனைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை! எங்கும் பேத மில்லை!
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன், உடைமை மக்களுக் குப்பொது!
புவியை நடத்து பொதுவில் நடத்து!


(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.150)



இந்தக் கவிதை வரிகள் சாகா வரம் பெற்றவை.


யாரால் திருட்டு?

தனியுடைமைச் சமுதாயம் தோன்றிய பிறகு மானுடம் அடைந்த தீமைகள் பலப்பல. முதலில் மனிதன், மனிதன் என்ற மதிப்பை இழந்தான். எங்கும் சொத்து அளவின் அடிப்படையில் மனித மதிப்பீடு தொடங்கிவிட்டது. சொத்துக்களின் அடிப்படையே வாழ்க்கை என்ற நியதியால் மனிதன் சூது வாதுகளால் - மோசடிகள் வாயிலாகக்கூட, சொத்துச் சேர்க்கலானான். இதனால் மனித நேயம் கெட்டது; ஒழுக்கம் தவறிப் பாழ்பட்டுப் போயிற்று, களவு, காவல், இரத்தல், ஈதல் ஆகியவை தோன்றலாயின. களவு என்ற தீமையைச் சொத்துடையோன்தான் உருவாக்குகின்றான் என்பது பாவேந்தனின் கொள்கை.


"பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
பொதுவுடைமை யோன்திருட்டைக் களைவிக் கின்றான்."

(பாண்டியன் பரிசு-பக்.31)


என்பது பாவேந்தனின் பாடல், சொத்துடையோர்களிடையில் ஏற்பட்ட போட்டிகள், பூசல்கள் இவற்றின் காரணமாக அரசுகள் தோன்றின. இன்றுவரை அரசுகள் சொத்துடைமையுடைய மேட்டுக் குடியினருக்கும்,