உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

389


தமிழுக்குப் பகை தமிழரே!

தமிழை, தமிழின் எழிலை, தமிழின் தரத்தைத் தடுத்து மறைத்து எவரும் அறியாவண்ணம் செய்யும் இழி முயற்சிகள் பாவேந்தனுக்கு நெஞ்சு பதைபதைக்கும் நிலையைத் தருகிறது. இன்று ஒவ்வொருவருமே தமிழுக்குப் பகையானோம்! இந்த நிலை என்று மாறும்?

பிறமொழிக் கலப்பால் தமிழ், தன் தகுதியை இழந்தது; தன்மையை இழந்தது! தமிழ்க் கலை, நாகரிகம், ஒழுக்கம் ஆகியவற்றில் அக்கறை நமக்கு இல்லை; முயற்சி இல்லை! தமிழ் அழிந்து வருகிறது! வெறும் உயிர்ப் பிண்டமாகத் தமிழர் வாழத் தலைப்பட்டனர்; வாழ்கின்றனர்! மீண்டும் தமிழர்கள் எழுந்திருப்பார்களா? எழுந்திருப்பர் என்ற நம்பிக்கை கால்கொள்ள மறுக்கிறது. ஏன்? தமிழரிடை ஒருமை இல்லை; ஒற்றுமை இல்லை! இதனால் தம்முள் முரணிப் போர் செய்து, அழியத்தான் நேரம் இருந்தது. இன்றையத் தமிழர்கள் பற்றிய பாவேந்தனின் ஒரு சித்திரம் இதோ:

"தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழ் உண்டா? தமிழ் ஒழுக்கம்
அமைவுறச் சிறிது முண்டா?
அன்றைய மறத் தனந்தான்
கமழ்ந்திடல் உண்டா? கல்வி
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளவி லேனும்
ஒற்றுமை உண்டா?"

(குறிஞ்சித்திட்டு பக்.185)

என்று பாடியிருப்பது கவிதையா? சாட்டையடியா?

பாவேந்தன் குறகிய நோக்கம் உடையவன் அல்லன். பிற மொழிகளைப் பயில்வதைப் பாவேந்தன் தடைசெய்ய