பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுதந்திரதேவியாக மாற்றுகின்றான். சாமியார்களைப் பாரதி எதிர்க்கவில்லை உழைக்க வைத்து அவர்களின் தொப்பையைச் சுருக்குகின்றான். பாரதி, யுக சந்திப்புக் கவிஞனாக இருந்து விளைவித்த அற்புதங்கள் எண்ணற்றவை.

பாரதி, தருமமெல்லாம் தாழ்ந்து, பாவச் செயல்கள் மிகுந்து, பாதகமே மேலோங்கி நின்ற பாழ்த்த கலியுகத்தில் வாழ்ந்தான். ஆயினும் அவனைக் கலியுகக் கொடுமைகள் தொட்டு அழித்து விடவில்லை. ஏன்?' அவன் வீரன்! மாவீரன்! "சுடுதலும் குளிரும் உயிர்க்கில்லை” என்ற தத்துவத்தின் உருவமாக வாழ்ந்தவன், அவன் கலியுகத்தில் நின்று, கலியுகத்தை அதன் எல்லைக்கு விரைந்து செலுத்தினான்; கிருதயுகத்தையும் விரைந்து கொணர முயன்றான்.

“வீழ்த்தல்பெறத் தருமமெலாம், மறம் அனைத்தும்
கிளைத்துவர, மேலோர் தம்மைத்
தாழ்த்த, தமர் முன்னோங்க, நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்தகலி யுகம்சென்று மற்றொர் உகம்
அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன வீரமுடன் யுகாந்தரத்தின்
நிலையினிது காட்டி நின்றான்."
(பூபேந்திரர் விஜயம்)

என்று பூபேந்திரரைப் பாடிய அவனது பாடல் பாரதிக்கும் பொருந்துவதாகும்.

பாரதி, "கவலைப்படுகிற பிறவியல்ல. கவலை, மானுடத்தை அழிக்கும்.. நூறாயிரம் கோடி படைகளாலும் அழிக்க முடியாத மானுடத்தைக் கவலை. அழித்துவிடும். கவலை, ஆக்கப் புனைவுடன் வரும். ஆனால், புனைவுதான் ஆக்கம்; விளைவு அழிவு. வாழ விரும்புகிறவர்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்காமல் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள