பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

35

வரவேற்கின்றான். தொழில் திட்டங்களை வகுத்துத் தருகின்றான்.

மானுட சாதியின் நுகர்வுப் பொருள்கள் இரு அணி யினரால் படைக்கப்படுகின்றன. ஓர் அணி, உழவர் அணி. பிறிதோர் அணி, தொழிலாளர் அணி. இந்த இரு அணியினரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் படைக்கும் பொருள்களினால்தான் உலக இயக்கம் நடைபெறுகின்றது. உழைக்கும் சக்தியால் படைப்புப் பலபடைத்துப் பாரினை உயர்த்தும் உழவுத் தொழில்ையும், தொழில் திறனையும் பாரதி போற்றுகின்றான்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை - செய்வோம்" என்று பாரதி முழங்குகின்றான்; அதே போழ்து உழைக்காமல் மற்றவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் எத்தரை நிந்தனையும் செய்யக் கற்றுக் கொடுக்கின்றான். "வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்!” இந்த மனப்போக்குத்தான் கிருதயுகத்தின் வாயில்.

மானுட சாதியில் பிறந்த ஒவ்வொருவனும் உழைத்து, அவனவனுடைய உழைப்பிற்குரிய பங்கை அவனவன் எடுத்திக் கொண்டு வாழ அனுமதித்தால் எங்கேயும் சொத்து சேராது; குவியாது. ஆனால், வல்லாண்மையுடையோர் மற்றவர் உழைப்பிற்குரிய பங்கைத் தர்ாமல் திருடிச் சேர்த்துக் கொள்கின்றனர். கலியுகத்தில் திருடு என்றால், ஒருவருக்குச் சொந்தமான பொருளைத் திருடுதல் என்றுதான் பொருள். ஒருவருக்குப் பொருள் சொந்தமாவது எப்படி? என்று ஆராய்ந்தறியுமாறு கலியுகம் சொல்வதில்லை. கிருதயுகம், ஒருவர் உரிமையுடையவராய் இருத்தலினாலேயே உடைமை அவர்க்குச் சொந்தம் என்று கூறாது. உரிமைக்குத் தகுதி, அரசின் சட்டங்களும், சார்புநிலை மதப் புரோகிதர்கள் வகுத்துக் கொடுத்த ஊழ்வினையும் என்பதைப் பொது