பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கின்றான். கடவுள் ஒரு தத்துவம்; மூலப் பொருள்; உண்மை. ஆதலால் பாரதி, கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைப் படைக்கும் பணி முன்னோன் அருளைத் துணையாகக் கொண்டே நிகழும் என்று கூறுகின்றான்.

"மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கி
பொய்க்குங் கவியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதி இஃதே."
(விநாயகர் நான்மணிமாலை-39)

என்று பாடுகின்றான். இதனையே, வேறோரிடத்தில்

"ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி"

என்றும் பாடுவான். ஆதலால் யுகத்தின் விளைவுகள் மனிதர்களின் ஆசாபாசங்களால் விளைவதே தவிர, அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. முன்னவன் துணை கொண்டு கிருதயுகம் அமைப்போம் என்னும் பாரதியின் நெறி வெல்க!

பாரதி, இந்தச் சமுதாயத்தை ஆழ நினைந்து பாடியவன். பாரதி தீமைகளின் வேர் ஓடியுள்ள மட்டும் கண்டுபிடித்து வேரொடும் மண்ணொடும் கல்லி எறிய முயற்சி செய்தவன். சமுதாய மாற்றங்கள் எளிதில் நிகழா சமுதாய மாற்றங்களுக்கு அடிப்படையில் நிகழ வேண்டியது அறிவுப் புரட்சி. அறிவு, சமுதாயத்திற்கு வழங்கப்பெறாத வரையில் சமுதாயம் இருட்டறையில்தான் கிடக்கும். எடுத்துத் துரக்கினாலும் எளிதில் தேறாது. ஆதலால் பாரதி, அறிவுப் புரட்சிக்கு வித்தான கல்வியை வழங்குவதில் கவலை