பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

69


விடுதலை பெற்ற இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தொழிற் புரட்சியே உதவி செய்ய இயலும் என்பது. பாரதியின் திடமான நம்பிக்கை. அத் தொழிற் புரட்சிக்குத் திட்டங்களை வகுத்துப் பாடிய பெருமை பாரதிக்கு உண்டு. உலகத்தில் தொழிற் புரட்சிக்குரிய திட்டங்களை வகுத்துத் தந்த முதல் கவிஞன் பாரதி, அவனுக்குப் பின்னும் பாரதியின் ஆவேசவுணர்ச்சியுடன் யாரும் பாடவில்லை.

வாழ்க பாரதியின் புகழ்!
வளர்க தொழிற் புரட்சி!

பாரதியின் சமுதாயம்

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்;
எல்லாரும் இந்தியா மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை;
எல்லாரும் இந்நாட்டு மன்னர்

என்பது பாரதியின் பாடல். பாரதி இந்த நிரல் நிறை முறைவைப்பை உயர் குறிக்கோளோடு அமைத்திருக்கிறான். பாரதி, சமுதாய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கவிதை செய்தவன்; நாட்டுக்கு உழைத்தவன். பாரதி, அவன் காலத்திலிருந்த சமுதாய அமைப்பை நகர்த்தி, தனது குறிக்கோளின் எல்லைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். இஃதொரு கவிதைப் பயணம் கருத்து வளர்ச்சிப் பயணம்; நாட்டு வரலாற்றில் நடக்க வேண்டிய பயணம்.

இந்திய சமூகத்தில் எண்ணத் தொலையாத சாதிப் பிரிவினைகள்; கோத்திரங்கள்! குலங்கள்! இந்தப் பிரிவினைகளாலேயே இந்திய சமூகம் உள்ளிடழிந்தது; உருக்குலைந்தது; அந்நியர்க்கு அடிமைப்பட்டது. அடிமைத் தனத்திற்குரிய காரணத்தை நீக்கினாலொழிய விடுதலை வராது; வந்தாலும் நிலை பெற்றிருக்காது என்பது பாரதியின் முடிவு. எனவே, இந்திய சமூகத்திலிருந்தே சாதிகளை அறவே நீக்கப் போராடு