பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

ஆற்றேன் அடி யேன்அதி கைக் கெடில
வீரட்டா னத்துறை அம்மானே!

(4–1–1)


என்று பாடிப் பரவுகின்றார். திருவதிகை ஈசன் செந்தமிழ்ப் பாமாலைகளில் மகிழ்ந்து “திருநாவுக்கரசர்” என்ற புகழ் நாமத்தைச் சூட்டி அழைக்கின்றான். தமக்கையாரின் தூய அன்பினைக் கருவியாகக் கொண்டு, திருவதிகை ஈசன் அருளைப் பெற்று, சூலை நீங்கப் பெற்று, சிவனருளில் திளைத்தார்; இன்புற்றார்.

சமணர்களால் ஏற்பட்ட துன்பங்கள்

இந்நிலையில் சமண முனிவர்கள் வாளாவிருக்கவில்லை. இந்திய நாட்டில், தமிழ் நாட்டில் வளர்ந்த சமயங்களுக்கிடையில் பூசல்கள் இருந்தன என்பது உண்மை. ஆனால் அவை மதச் சண்டைகளா? என்று ஆராய்ந்தறிய வேண்டும். உலகத்தில் மதத்தின் பெயரால் போர்கள் நடந்தன என்பது உண்மை. ஆயினும், அவை மதத்திற்காக நடந்த சண்டைகள் அல்ல. ஆதிக்கச் சண்டைகளேயாம்.

தமிழ்நாட்டில் சமணம் பரவிய காலத்தில், யாரும் அதை எதிர்க்கவில்லை. வழி வழிச் சைவ வேளாண் மரபினரான மருணீக்கியார், சமண சமயத்தைச் சார்ந்த போது யார் தடுத்தார்? ஒருவரும் தடுக்கவில்லை. பல்லவ, பாண்டிய மன்னர்களை மதம் மாற்றி அவர்களைத் தம் வசப்படுத்திக்கொண்டு மற்ற சமயத்தினருக்கு - குறிப்பாகச் சைவ சமயத்தினருக்குத் தொல்லை தந்த பொழுதே வம்பு பிறக்கிறது.

சமண சமயத்திற்கு மருள்நீக்கியார் சென்றபொழுது யாரும் அவரைத் தடுக்கவில்லை. திலகவதியார் கூட மனம் வருந்தினாரேயன்றித் தடுக்கவில்லை; ஆனால் தருமசேனரான மருள்நீக்கியார், மீண்டும் சிவநெறிக்கு வர, தவம் செய்கிறார். அவ்வளவுதான்! மருள்நீக்கியார் சமணத்தி