பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
        மயிலாலும் ஆரூ ராரைக்,
கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக்
        காய்கவர்ந்த கள்வ னேனே,

என்ற அப்பர் திருப்பாட்டு உணர்த்தும்.

7. இருட்டறையில் மலருகறந்து எய்த்தவாறு...!


சமயநெறிகள் உலகிடைப் பலப்பலவாய்த் தோன்றி விரிந்துள்ளன. குறிக்கோள் அடிப்படையில், அதாவது உயிர்கள் உய்திபெறு நிலைபேறாய இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற நோக்கில், சமய நெறிகளுக்குள் முரண் பாடுகள் இல்லை; மோதுதலும் இல்லை. ஆயினும் உயிர், உலகு, கடவுள், பிறப்பு, இறப்பு ஆகிய உண்மைகளைப் பற்றிய அறிவில் சமய நெறிகள் முரண்பட்டே பேசுகின்றன. இந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. காலம், பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையேயாம்.

ஆதலால், சமய ஒருமைப்பாட்டுணர்வைப் பேணிப் பாதுகாப்பதோடு பல்வேறு சமய நெறிகளையும் கற்றுத் தெளிந்து நின்று ஒழுகி அனுபவமும் பெற்று, எந்த நெறியில் அதிகத் தெளிவும் உறுதியும் இருக்கின்றனவோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுவது மனித உலகத்தின் கடமை யாகும். இங்ஙனம் எடுத்துக் கொள்ளக் கூடிய தகுதி பெறாத வர்களை விரிவிலார் என்று அப்பரடிகள் கண்டிக்கிறார். இன்று, சமய நெறியினர் பல்துறையையும் ஆராயும் துணிவின்றித் தேங்கியே நிற்கின்றனர். மக்களைச் சிந்திக்கத் தூண்டாமல் பழக்க வழக்க வலையிற் சிக்கவைத்து ஆதிக்கம் செய்யவே சமய நெறியாளர்களும் விரும்புகின்றனர். சமய