பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
195
 

முற்றியது; சுவையூட்டத் தேவையில்லை; சுவைத்தலும் இனிது; தின்று மகிழ்தலும் இனிது; எளிதில் செரிக்கும்; முழுவதும் உடலுக்குப் பயன்தரும். சித்தாந்தச் சிவநெறி கனிச்சாறு அணையது. “ஒரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த, ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுதருந்தினர்” என்பது குமர குருபரர் வாக்கு சிவன், விரதங்களெல்லாம் மாண்ட மனத்தவன்; பழத்திடைச் சுவையொப்பவன்; கனியும் கனிதரு சுவையும் ஒத்தவன், “ஈசன் எனுங்கனி” என்பர் அப்பரடிகள். காய் காவலுடையது; கனியாகும் வரையில் காவலுண்டு. காயாகப் பறித்துத் தின்ன வேண்டுமென்றால் களவாகக் கல்லெறிந்து பறித்திடுதல் வேண்டும்; கனி காவலற்றது. கனி பறித்தற் குரியதுமன்று. அதுபோலவே காய் அனைய சமயங்களில் நிற்பவர்களுக்குப் பொறிகள் காவலும் புலன்கள் காவலும் வேண்டும். சிவநெறியின் கொள்கை வாழ்க்கை மகிழுதலுக் குரியது என்பதாகும். இறைவனே “பொன்னும் மெய்ப்பொருளும் தந்து துய்க்கச் செய்வான்; “ஒப்புடைய மாதராய்” நின்று துய்க்கச் செய்வான். அனுபவத்திற்குத் தடையில்லாத இடத்தில் காவலும் கிடையாது; களவும் வாராது. சிவநெறி காவலற்ற நெறி; அனுபவ நெறி. இந்நெறியல்லாது வேறு நெறிகளில் நின்றொழுகுதல் கணியிருக்கக் காய் கவர்ந்ததையொக்கும். “கனியிருக்கக் காய் கவர்ந்தது” என்பது மிகவும் சுவையானது. சிவநெறியில் பிறந்திருந்தும் சமணத்திற்குச் சென்று திரிந்ததை அடிகள் அழகாகக் குறிப்பிடுகிறார். இதனை,

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி
யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்