பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இதனை,

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர்
துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப் போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே!

என்று அப்பர் பாடுகிறார்.

15. மன்றத்து நின்ற மரம் வாழுமோ?

இன்றைய மனித சமுதாயத்தில் தனி உரிமை, 'பொது உரிமை' என்ற சொற்கள் பெரு வழக்கில் வழங்கப் பெறுகின்றன. தனி உரிமை-பொது உரிமை என்ற சொற்கள் பெருவழக்காதல் வளரும் சமுதயாத்திற்கு நல்லதல்ல. ஏன்? தனி உரிமையும் பொது உரிமையும் இன்று ஒன்றோடொன்று மோதக்கூடச் செய்கின்றன. தனி உரிமையும் பொது உரிமையும் அரும்பும் மலரும் போல் ஒன்றையொன்று தழுவி நிற்க வேண்டியன. தனி உரிமை, பொது உரிமை ஆகியவற்றில் முதலிடம் கொடுத்துப் பேணத்தக்கது பொது உரிமையேயாம்.

பொது உரிமை தாயானால் தனி உரிமை சேய், ஆனால் சமுதாயப் பேரறிவு வளராததன் காரணமாகத் தனி உரிமையிலிருந்துதான் பொது உரிமை தோன்ற வேண்டும் என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. ஆனால் மனித சமுதாய வரலாற்றுப்படியும், வாழ்வியல் முறைப்படியும் பொது உரிமைதோன்றி வளர்ந்து செழுமையடையும் பொழுதே தனி உரிமை தோன்றுகிறது.

நம்முடைய சமுதாயத்தில் தனி உரிமை உணர்வு வளர்க்கப்பட்டமையின் காரணமாக, இந்த நாள் வரையில் பொது உரிமையை விட, தனி உரிமையே முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் நம்முடைய சமுதாயத்தில்