பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
239
 

ஆதலால் நம்முடைய மனம் என்ற கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்து நாள்தோறும் அவனை வழிபட்டு உய்வோமாக!

21. வானகத்தை வழங்கும் வாழ்க்கை

                ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம்
                நான்நி லாவி யிருப்பன்என் நாதனைத்
                தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
                வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே!

ஊன் வேறு, உயிர் வேறு. ஊன் - கருவி, உயிர் - ஊனாகிய கருவியைப் பயன்படுத்தும் கருத்தா. ஊனிற்குக் குணமில்லை; செயவில்லை. உயிருக்குக் குணம் உண்டு; செயலுண்டு. உயிர், ஊனாகிய கருவியைக் கொண்டுதான் தொழிற்படுகிறது; பயன் விளைவிக்கிறது. உயிர்க்கும் அறிவு, தொழில், குணம் ஆகியவை உண்டாயினும் அவை நிறைவுடையன அல்ல; இன்பமே தருவனவாகவும் இல்லை. ஆதலால், உயிர் தன்னினும் சிறந்த இறைவனை - திருச்சிற்றம் பலவனைத் துணையாக நாடிப் பெறுகிறது. இறைவனைத் துணையாகப் பெற்றோனின் ஊன், உயிர் எல்லாம் அன்பின் நெறிப்பட்டவை; அருளார்ந்தவை. ஊனில் நிலவும் ஆவி-உயிர், உயிர்க்கும் பொழுது எண்ணும்; நோக்கும்; சிரிக்கும்; செயற்படும். இவை நிகழும் பொழுது உயிராற்றல் மங்கி, ஊன் முழுமையாகத் தொழிற்படாது போனால் முடை நாற்றம் வீசும், இரக்க உணர்ச்சியே இருக்காது. இது வெறுத்து ஒதுக்கத்தக்க வாழ்க்கை. உயிர் ஆற்றல் மட்டுமே தனியே தொழிற்படின் பகை, பிணக்கு, போட்டா போட்டிகள் தலைகாட்டும். இன்ப மயக்கத்தில் துன்பமே விளையும்.

உயிர், திருச்சிற்றம்பலவனை நாடித் துணையாகப் பெற்று அவனோடு கலந்து, அவன் தன் இயல்புகளைச்