பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
278
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

பழுதிலாத் துறவையும் எங்குத் தேடினும் காணோம்! எஞ்சியிருப்பது சோம்பல்! சுகவாழ்க்கையில் நாட்டம்! சமயத்துறையில் பொருளற்ற சடங்குகள்! சாதிகளின் கொட்டம்! இன்னோரன்ன தீமைகள் நாள்தோறும் வளர்கின்றன.

இன்றைய தமிழகத்திற்கு அப்பரடிகளே சிறந்த வழிகாட்டி! அப்பரடிகளின் அடிச்சுவட்டில் புதுமையும் பொதுமையும் காண, அன்பும் ஞானமும் காணப் போராடுவோமாக!