பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருநாவுக்கரசர்
307
 


தனியுரிமையும், தனி மனிதஉணர்வும் நஞ்சென வளர்ந்து மனித குலத்தை அரித்துக் கெடுத்திருக்கின்றன. மனித சமுதாயம் என்ற ஒப்பற்ற மாளிகை, 'நான்’, ‘எனது’ என்ற இரண்டு 'இடி'களால் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'நானிலும்' 'ஒரு மனித'னிருக்கிறான். ‘நாமிலும்', ஒரு மனிதனிருக்கிறான். ‘எனதி'லும், ஒரு 'மனித'னுடைய உரிமை உணர்வு இருக்கிறது. 'நம்'முடையதிலும் 'ஒரு மனித'னுடைய உணர்வு இருக்கிறது. ஆனால் இரண்டிற்கும் இடையே வேற்றுமை! 'யான்’, ‘எனது’ என்ற உணர்வு வெறுப்பை வளர்க்கிறது; பகைமையை வளர்க்கிறது. பாதுகாப்பின் மையைத் தோற்றுவிக்கிறது. 'நாம்’, ‘நமது' என்ற உணர்வு அன்பைப் பெருக்குகின்றது; உறவை வளர்க்கின்றது; பாதுகாப்பைத் தருகின்றது.

தனி உரிமையில் பொதுவுரிமை அடங்காது. பொது உரிமையில் தனியுரிமை அடங்கும். ஆயினும், வழிவழி சமுதாயத்தில் வேண்டிய அளவு பொதுமையுணர்வு வளர வில்லை. 'நான்’, ‘எனது' என்ற உணர்வு, மனிதனுடைய உத்வேகத்தை அழிக்கிறது. தனி மனிதன் ஒப்பற்ற காரியங்களைச் செய்யவே முடியாது. இதனை உணர்த்தவே மிகப் பருமனான ஒரு தேரைப் பலர் கூடி இழுக்கும் மரபைச் சமயநெறி தோற்றுவித்தது. ஆயினும் என்? தேர் இழுக்கப் பெறுகிறது. ஆனாலும், சமுதாயப் பொதுவுணர்வு தோன்ற வில்லை. தேரோட்டம் ஒரு சடங்காகப் போய்விட்டது. அதனால், தேரோட்டத்திலும் சண்டைகள் தோன்றி விட்டன!

மனிதன், ஒன்றில் ஒன்ற வேண்டும். அந்த ஒன்று கடவுள்; எல்லா உலகுக்கும் ஒருவனாக இருக்கின்ற கடவுள்; அவன் அவனுமல்லன், அவனுக்கு ஒன்றென்றே பெயர் கூறினும் பொருந்தும். அவனையே “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்ப்ரடிகள் பாராட்டுகிறார். “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று சாத்திரம் பேசும். “ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே” என்று மணி மொழி