பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
தலைமையின் தகுதிப்பாடு

தகுதி வாய்ந்தது தலைமை. தலைமைக்குரிய தகுதிகள் ஒன்றல்ல; பலப்பல. தகுதியனைத்தும் பெற்ற தலைமை தரணியில் கிடைப்பதில்லை. ஏன்? அமரர் உலகத்தும் கிடைப்பதில்லை. பொதுவாகப் பலர் தம்முடைய தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், தலைமைக்கு மட்டும் முந்திக்கொண்டு போட்டி போடுகின்றனர்.

மாணிக்கவாசகர், அமரர் உலகத்திலும் தகுதியுடைய தலைவர்கள் வேண்டுமென்று விழைகின்றார். தக்கன் வேள்வி செய்தான். வேள்வியில் இடப்படும் திருவமுதுப் படையற் பொருள்களைச் சிவனே பெறுதற்குரியவன். ஆனால் மண்ணில் நடமாடுவோர்க்கு இருப்பதைப் போலவே நான்முகனுக்கும், திருமாலுக்கும் தலைமை வேட்கை வந்து விட்டது. தலைமை வேட்கை வெறி பிடித்ததல்லவா? சதி பிறந்தது. வேள்விக்குச் சிவம் அழைக்கப்பெறவில்லை. நான்முகனும் திருமாலும் தலைமைக்குரிய இன்பத்தை அனுபவித்தார்கள். தூய்த்தலும், மகிழ்தலும் தலைமைக்குரிய இலக்கணமல்லவே! தாங்குவதன்றோ தலைமையின் இலக்கணம். அலை கடலில் நஞ்சம் எழுந்தது. தலைமையைத் தேடிப் பற்றிக்கொண்ட நான்முகனும் திருமாலும் நஞ்சினை