பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

அருளை வழங்குவான். வழங்கக்கூடாது என்பதல்ல. வழங்கினாலும் பயன்படுத்தும் தகுதியிருக்காது என்பதனால்-அவன் வளர்த்து வளர்த்தே வழங்குவான். கண்ணப்பன் அன்பினை வளர்க்க ஆறு நாள் தேவைப்பட்டது. காளத்தியப்பனுக்கு! ஆனால், பன்னாள் அருச்சித்த சிவகோசாரியார் வளரவில்லை. இன்றோ கண்ணப்பர்களை வளர்க்க நம்முடைய கோயில்கள் விரும்பவில்லை. சிவகோசாரியார்களைப் பாதுகாக்கவே விரும்புகிறது. மனிதனின் ஆன்மத் தகுதிக்கு ஏற்றவாறே இறையருள் கிடைக்கும். இங்ஙனம் பத்திமை வாழ்க்கையின் சிறந்த இயல்பினைத் திருஞான சம்பந்தர்,

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றனாம நாவினவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே,

என்று பாடுகிறார்.