பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைமையின் தகுதிப்பாடு
49
 

தாளினைப் பணிந்து அவன் இயல்புகளைப் பெறவேண்டும். தகுதியால் வருவதே தலைமை. மற்றபடி இடத்தால் - பொருளால் - வாய்ப்பால் - அதிட்டத்தால் - மற்றவர் ஏமாற்றத்தால் வரும் தலைமை, தலைமையாகாது. ஒவ்வொருவரும் நிறை நலமிக்க தலைமைக்கு முயற்சி செய்யவேண்டும்.

கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவரல் லாமை யுரைப்பீர்காள்
நிலவரை நீல முண்டதும் வெள்ளை நிறமாமே!

-திருஞானசம்பந்தர்

கு.இ.VII.4.