பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


1954-ல் அடிகளார் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய ஞான்று திருச்சியில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு பேசினேன்.

“சைவமும் தமிழும் உலக அரங்கில் கொலுவீற்றிருப்பதற்காகப் பரசிவனால் நமக்களிக்கப் பெற்ற விவேகானந்தர் போல விளங்குகிறார் அடிகளார்” என்று வரவேற்பில் கூறினேன். மீண்டும் 1958-ல் திருப்புகலூரில் அடிகளைத் தரிசித்தபோதுதான் திருமடத்துக்கு வரவேண்டும் எனப் பணித்தருளினார்கள்.

1959- 60-ல் திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கப் பணிகள் தொடங்கி விட்டன எனக் கூறலாம். ஆனால் அது முறைப் படிச் செயல்படத் தொடங்கிய காலம் 1967 ஆக அமையலாம்.

திருமுறைகள் வழிச் சமயக் கொள்கைகளையும் தமிழ் வழியில் தமிழகச் சமுதாயக் கொள்கைகளையும் வரையறை செய்யும் கொள்கை விளக்க நிறுவனமாக விளங்கியது திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம்.

பழைமையையும் புதுமையையும் நேருக்கு நேர் மோதவிட்டு, உண்மைக் கொள்கை-தமிழ்ச் சமுதாய வாழ்வியற் கொள்கை இதுதான் என வரையறுப்பதற்கும், அடிகள்தம் சிந்தனை அராவி, அராவி, முழுமையான சிந்தனையாக உருப்பெறுவதற்கும் உரிய உலைக்கூடமாக விளங்கியது திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம்.

தமிழகச் சிந்தனை வழியில் பண்பட்ட 63 உறுப்பினர்களை அடிகளின் வழியில் சிந்திக்கவும், செயற்படவுமாக ஆக்கித் தந்த களப்பணி நிறுவனமே திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம்.

பழமைக்கு இருவர் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், தத்புருஷதேசிகர்; புதுமைக்கு சிவத்திரு சங்கர நாராயணன், அடியேன். திருவையாறு சுவர்ண காளீஸ்வரனிடத்தில் அடிகளுக்கு ஒரு தனித்த அன்பு உண்டு. இவ்விருவகை அணிகளுக்கும் பாலமாக நின்று புதுமைக் கொள்கை தோன்றவும் புதுமைச்சமுதாயம் காணவும் இடைநின்று வினாக்களை எழுப்பி எழுப்பிச் சிந்தனைகளைக் கூர்மையாக்கும் அருந்தவப் பணியே அடிகளின் பணி. இப்போது யான் தனி மரமாக நிற்கிறேன்.

ஒருவர் தனித்துச் சிந்திக்கலாம்; சிக்கல்களுக்குத் தீர்வுகாணலாம். ஆனால் 63 பேர் அடங்கிய கூட்டத்தைச் சமுதாய முன்னேற்றம் என்ற தனிவழியில் சிந்திக்க வைப்பதும் செயற்பட வைப்பதும் மிக