பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொய்யும் யானும்
புறமே போந்தோம்!

இறைவன் உயர்த்தியுள்ள கொடி இடபக் கொடி. இடபம் அறத்தின் சின்னம். எருது கடுமையாக உழைக்கவும் உழைப்பின் பயனை மற்றவர்க்குக் கொடுக்கவும் செய்கிறது. அதுபோல மனிதன் கடுமையாக உழைப்பதையே ஒழுக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறருக்காக உழைப்பது நோன்பு, தவம் என்று புறநானூறு கூறும்.

அறம்- தற்சார்பில்லாதது. அதனால் அறம் விலைப் பொருள் அல்ல. அறத்தை விலைப் பொருளாகவும் ஆக்கக் கூடாது. “அறவிலை வாணிகன் ஆய் அலன்” என்று புறநானூறு கூறும். அறம் ஆன்மாவைச் சார்ந்தது. அறம், அகநிலைப் பண்பு, அறம், இம்மையின்பத்தையும் தரும்; மறுமை இன்பத்தையும் தரும். மாணிக்கவாசகர் “பொய்யும் யானும் புறமே போந்தோம்” என்றருளிச் செய்துள்ளார். திருவாசகப் பாடலில் வரும் புறம், அறத்திற்கு எதிரிடையான புறம். இறைவனுடைய திருவடி இன்பத்திற்குப் புறமாய புறம். புறம், உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாத நிலை. அற நெறிக்கு, அன்பு நெறிக்கு எதிரிடையானதெல்லாம் புறம். புறம், பயனற்றவை ஒன்று சேரும் இடம்; அல்லது போடப்படும் இடம். புறம் என்பது ‘வெளியே’ என்ற பொருளும் தரும். “புறஞ்சுவர் கோலம் செய்வான்” என்று பாரதம் கூறும். புறத்தே வந்தபிறகு ஆன்மாவின் நிலை என்ன? தீயவை எல்லாம் புறம், தீயவை எழு பிறப்பும் தீண்டும், தீயைவிடத் தீமை கொடிது. பொருள் கூடத் தீதின்றி வந்தால்தான் பொருள் எனப்படும். அப்பொருள்தான் இன்பந்தரும். நெருப்பு புகையால் மூடப்பட்டுள்ளது. முகம் பார்க்கும் கண்ணாடியும் கூடப் புழுதியால் மூடப்படுகிறது. அதுபோல்