பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

227


ஏசற்றிருந்தே வேசற்றேன் என்பது மாணிக்கவாசகரின் மணிமொழி. முழுப்பாடலையும் அனுபவிப்போம்:

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலில் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ?

பொற்கிண்ணம்

சிவானந்த அனுபவத்தில் திளைத்த மாணிக்கவாசகருக்கு உலகியல் சான்றுகள் எளிதில் கிடைக்கின்றன; அவர் மிகச் சிறந்த உண்மைகளை விளக்க எடுத்தாளும் உவமைகள் எளியனவாக இருக்கின்றன. நடைமுறையை ஒட்டியன வாகவும் இருக்கின்றன என்பது உணர்ந்தின்புறத்தக்கது.

உலகியலில் அறியா மக்கள் தாம் முயன்று பெற்றவற்றையேகூட அருமை கருதித் தொடர்ந்து போற்றிக் காப்பாற்றுவதில்லை. மிக மோசமான இயல்புடைய மக்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் எதையும் அதனுடைய தகுதியறிந்து போற்றுவதில்லை. பன்றியின் முன்னே முத்தை வாரியிறைத்தது போலவும், கழுதையின் மீது குங்குமப் பூவைச் சுமத்தியது போலவும் ஆகிவிடும், அறியா மாக்களுக்குச் சான்றோர் செய்யும் உதவிகள். பலகால் கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பு பொதுவாக மக்களிடத்து இருப்பதில்லை. அருமையை உணர்ந்து பாராட்டுவதற்குப் பதிலாக அந்த உதவியைச் செய்யும் இயல்புக்கும் ஏதாவதொரு உள்நோக்கம் கற்பித்துக் களங்கப் படுத்தவும் செய்கின்றனர் இவ்வாறு,