பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

233


சார்பினைத் தழுவிய உயிர், விளையும் நிலத்திலே இட்ட வித்துப்போல விளைகின்றது-பயன் தருகின்றது. முன்னைய வாழ்க்கையை நினைந்து நொந்து மாணிக்கவாசகர் பாடும் இடங்கள் பற்பல!

“தனியனேன் பெரும்பிறவிப்
பெளவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு
பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார்
என்னுங் காலால்
கலக்குண்டு காமவான்
சுறவின் வாய்ப்பட்டு
இனியென்னே உய்யுமாறு
என்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக்
கிடக்கின் றேனை
முனைவனே முதலந்தம்
இல்லா மல்லற்
கரை காட்டி யாட்கொண்டாய்
மூர்க்க னேற்கே!”

என்ற பாடல் இதற்கு எடுத்துக் காட்டு. ‘தனியனேன்’ என்று குறிப்பிடுவது திருவருட் சார்பின்றி உயிர் தனித்திருக்கும் நிலையினையேயாம். உயிர் எந்த ஒன்றையாவது சார்ந்து தானே இருக்கும். அப்படியிருக்கத் தனியனேன் என்று கூறுவானேன்? உயிர் திருவருட் சார்பின்றி உலகியல் சார்பில் வாழ்வது உண்மைதான். ஆயினும், பயன்தராத சார்பைச் சார்பென்று கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தத் துணை இருந்தும் இல்லாதது போலவே! ஆதலால், ‘தனியனேன்’ என்று குறிப்பிடுகின்றார். அதுவும் மயக்க உணர்வில் துணை என எடுத்துக் கொண்ட ஒன்று தன்னையே திரும்ப

கு.இ.VIII.16.