பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்தப் பால் எப்படி இருக்குமே அப்படித்தான் இருப்பார்கள் சித்தம் அழகில்லாதவர்கள்.

மனித வாழ்வின் ஊற்றுக்கண் சித்தம். சிந்தனை, எண்ணம், செயற்பாடு அனைத்தும் சித்தத்திலிருந்தே பிறக்கின்றன. சித்தம் அழகில்லையானால் நல்ல சிந்தனை தோன்றாது - நல்ல எண்ணங்கள் தோன்ற மாட்டா - நல்ல எண்ணங்கள் இல்லையானால் நல்ல செயற்பாடு தோன்றாது.

இரத்தம் கெட்டால் நோய் ஏற்படுவது போல, சித்தம் கெட்டால் சீரழிவுகளே ஏற்படும்.

சித்தம் அடித்துக் கொண்ட பிறகேதான் கைகள் அடித்துக் கொள்ளும்.

நீண்ட நெடு நாட்களுக்கு முன்பே நம் நாட்டில் சித்தத்தை அழகுபடுத்தும் முயற்சி தோன்றிவிட்டது. சித்தத்தின் அழகுபற்றிப் பேசப்பட்டு வருகிறது- ஓரளவு காப்பாற்றப்பட்டும் வருகிறது. இன்று பலர் சித்தம் அழகுடையராக இல்லாமையாலேயே உலகில் போரும் புயலும் ஏற்படுகின்றன.

மனத்தில் மாசின்றி இலட்சியத்தில் பெரு விருப்புடையவர்களாக நாம் விளங்க வேண்டும். கடமையைக் கடமையாகச் செய்ய வேண்டும். அதுவே அறம் எனப்படுவது. சமுதாய நிர்ப்பந்தத்திற்காகச் செய்வோம் என்று செய்வது அறத்தின்பாற்பட்டதன்று. சுயமாகச் சிந்தித்து-நிர்பந்தத்திற்குக் கட்டுப்படாமல் செயல்படுவதே சிறந்த அறம். இந்த அறச்செயல் உணர்வு பெருக வேண்டும். பொதுவாக, இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே தட்டில் ஒரு சேர வைத்து உண்ணுகின்ற நிலை பெற வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் இன்பமும் ஏற்படலாம்-துன்பமும் ஏற்படலாம். இரண்டையும் ஒரு சேர மதிக்கும் பக்குவ நிலைபெற வேண்டும். சிலர் தமக்கு ஆதாயம் இருக்கும்