பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர் கண்ட காட்சி

301


அறிதலுக்குரியது மட்டுமல்ல அறிவுக்கு விருந்தும் கூட! திருவடிகள் தாள்கள் என்றும் அழைக்கப் பெறும். தாங்கும் தன்மையுடையன தாள்கள்; பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்து வாழ்விக்கும் இறைவனின் தாள்கள்! தாங்கும் தன்மையுடைய தாள்கள்! தாள்கள் முயற்சியின் சின்னம்! உழைப்பின் சின்னம்! “நோன்றாய்” என்று புறநானூறு கூறும்! “தாளாண்மை” என்று திருக்குறள் கூறும். திருவடிப் பேறு என்றே சமயத் தத்துவங்கள் கூறும்! திருவடிஞானம் என்னும் தத்துவம்.

திருவடிக் காட்சி, திருவடிஞானம், எளிதில் கிடைக்காது. முதலில் ஆன்மா இடையீடின்றி சிவத்தை எண்ணுதல் வேண்டும்; சிந்தித்தல் வேண்டும். தவமும் கூட விகார உணர்வுகளுடன் செய்யின் திருவடிக் காட்சி கிடைக்காது; ஏன்? தேவர்களே இன்னமும் கடவுளைக் காணவில்லை; காண இயலவில்லை; தேவர்கள் கெட்டிக்காரர்கள்; கடவுளைக் கண்டதாகவும் கடவுளைப் பற்றிப் பலபடவும் கூறுகின்றனர். ஒருவர் செம்மேனியின், பிறிதொருவர் வெண்ணீரணிந்த திருமேனியராதலால் வெண்மை நிற முடையவர் என்று கூறுகின்றார். ஒருவர் இல்லை ‘அநேகன்’ என்று கூறுகின்றார். ஏன்? இவையனைத்தும் பொய்: உண்மையும் கூட! ஏன்? இறைவன் பக்தர்கள் நினைக்கின்ற வடிவில் அவர்களுடைய உள்ளத்தில் எழுந்தருளும் தன்மையன்; ஆதலால், எவ்வெவர் கூற்றிலும் உண்மை உண்டு; இறைவன் அணுவாக இருக்கிறான்; இல்லை, சென்று சென்று தேய்ந்து விடும் அணுவாய் இருக்கிறான்; நுண்ணியோன் காண்க;

இந்தப் பாடலில் இறைவன் சுட்டி அறியப்படுபவன் அல்லன்! இறைவனை எழுத்தும் சொல்லும் காட்டாது! இறைவன் ஞானத்தின் திருவுரு! இறைவனை ஞானத்தாலேயே அனுபவிக்க முடியும்! ஆன்மா, ஞானமயமாகும்