பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

313


முகனும் காணா மலை” என்று விளக்கி அருளுகின்றான் அறிவாலும் இறைவனைக் காண முடியாது. செல்வத்தினாலும் இறைவனைக் காண முடியாது. ஞானம் ஒன்றாலேயே இறைவனைக் காண முடியும். இறைவன் திருவருள் உலகின் எல்லோராலும், எல்லாப் பொருள்களாலும் தேடிக் காணப்படாதது. ஆயினும் அடியார்கள். அத் திருவருள் வலிய வந்து, பிழைகளைத் திருத்திச் சீராட்டி ஆட்கொள்ளும் கருணையை வியந்து உள் நெக்குருகப் பாடுகின்றனர்.

“ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி”

என்ற சொற்றொடர்களை நினைந்து நினைந்து ஓதுதற்குப் பாடுவோமாக! ஓதுவோமாக!

மானே! நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவ னென்றலும் நாணாமே
போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே யறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்குன் வாய்திறவாய்
ஊனே யுருகா யுனக்கே யுறுமெமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்

6

பகலிற் பேசுவதுபோல் இரவில் சிலர் நடப்பதில்லை. அதுமட்டுமன்று. முதல் நாள் பகல் பேச்சோடு இரவுப் பழக்கத்தின் காரணமாக மாறுபட்டு, மறுநாட்காலை முரண்பட்டு ஒழுகுவர்; பழகுவர், அயர்ந்து இருளிற் சிக்கிவிட்டாலும் ஒளியின் அனுபவத்தை இருள்கெடுத்து விடுகிறது. இத்திருப் பாடலில், உறங்குகிறவள் நேற்றுப் பகற்போதில்

கு.இ.VIII.21.