பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சைக்கும் இசை வெள்ளம்; அந்த இசைவெள்ளத்தில் ஆழ்ந்து பரம்பொருளைப் பாடுகின்றோம். நாங்கள் பரம்பொருளைப் பாடும் ஒலி உனக்குக் கேட்கவில்லையா? அம்மா! தாயே! வாழ்க, உன் உறக்கம்!

உடல் உறக்கம் இன்றியமையாததே! பாவைப் பாடலில் உணர்த்தப்படும் உறக்கம் உடல் உறக்க மன்று! உயிர் உறக்கம்; இன்று உலகிடை விழித்திருந்து உண்டு திரிந்து வாழ்வோரில் கோடானு கோடி பேர் உயிருறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஐயகோ! உயிர்கள் அறியாமைப் பேருறக்கத்தினின்றும் விழித்தெழும் நாளே இன்பம் தொலையும் நாள்; இன்புற்று வாழும் நாள்; அப்போதே உயிர்கள் வளரும்; வாழும்! வாழ விரும்புவோருக்குப் பேருறக்கம் ஆகாது. உயிர் பேருறக்கத்தில் ஆழ்ந்து வாழ்தல் வாழ்வன்று. வாழ்வியலுக்குக் கண் திறந்திருந்தால் போதாது; உணர்வின் வாயில்களும் திறந்திருக்க வேண்டும். இங்கே தூங்குபவள் மெல்லக் கண் திறக்கிறாள். ஆனால், வாய் திறக்க மறுக்கிறாள்! கண்ணிருந்து வாய் பேசாத ஊமையானால் காட்சிக்குப் பொருளேது? இதனை உணர்த்த “வாழி! ஈதென்ன உரக்கமோ? வாய் திறவாய்!” என்கின்றனர்.

செல்வத்திற் சிறந்த திருமாலே, அரனை அயரா அன்பால் அருச்சித்ததை அறியாயோ? ஆழியான் அன்புடைமையை அறிந்திருந்தும் நீ படுக்கையில் மயங்கி உறங்குவது ஏன்? இறைவனை நீ சந்திக்காமல் உன் வாழ்வு நிறைவுறாது. ஏன்? இறைவன் பிறப்பு-இறப்புகளைக் கடந்த வன்! ஊழிகளை கடந்து தனி ஒருவனாய் விளங்குகின்றவன். ஊழிக்காலத்தில் அவனருளை நாடாமல் என் செய்வாய்? அன்று தேவைக்கெனத் தொழாமல், இன்று இயல்பாய்த் தொழுதல் நன்றன்றோ! அவன் ஊழி முதல்வனாய் ஓங்கி உயர்ந்து நின்றாலும் ஏதும் பெறாத ஏழைகள் பால் இரக்கமுடையவன். அருளே திருமேனியாகிய அம்மையைப் பங்கிலே உடையவன். அம்மையின் கூட்டால் அவன்