பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

321



“பெற்ற அனுபவத்தை வளர்க்கும் தோழமையை அருளிச் செய்வீர்! அடியவர்களையே கணவன்மாராகப் பெற அருளிச் செய்வீர்” என்று வேண்டுகின்றனர். மகளிரை மணக்கப் பொன் விரும்பிக் கேட்கும் இந்த யுகத்தில் பொன்னனைய மகளிர், தம்மை மணக்க விரும்பும் நம்பிக்குத் திருவெம்பாவை காட்டும் இலக்கணத்தை வகுத்தால் இயல்பாகவே வரதட்சணை ஒழியும்; ஏன்? ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்தம் அடியார்களாக முடியும். அங்ஙனம் வளர்த்தவர்கள் பொன்னை நேசிக்க மாட்டார்கள்; பொன்னனையாரை நேசிப்பர்; இறையருளை நாடிநிற்கும் அடியார்களை நாடுவோம்; அவர்களுக்குத் தோழமை பூண்போம்; தொண்டு செய்வோம்!

பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலும்
ஓத வுலவா வொருதோழந் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூ ரேதவன்பே ராருற்றா ராரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.

10

இன்றுபாடிய திருப்பாட்டில், நமையாளும் ஞானத் தலைவர் மாணிக்கவாசகர் மகளாக மாறிக் கோயிற் பணிப் பெண்களோடு பேசுகின்றார்; பெருமானைப் பற்றி வினவுகின்றார். அன்று, கோயிற் பணிப்பெண்கள் ஞானத்தில் முதிர்ந்தவர்கள்; பழுத்த மனத்து அடியவர்; திருவருளே நினைப்பாக வாழ்ந்தவர்கள்; இந்தநிலை, திருக்கோயில்கள் சாதிகளின் கூடாரமாகச் செல்வத்தின் பண்ணையாக, நிலப் பிரபுத்துவத்தின் மறுபதிப்பாக உருமாறியவுடன் மாறிற்று: கோயிற் பணிப்பெண்கள் நிலை தாழ்ந்தது. இன்று அதனினும் தாழ்ந்த நிலை! இன்றைய திருக்கோயில்களிலும் “பணிப்