பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20


ஞான உழவு!


பட்டினத்தார் துறவி; “காதற்ற ஊசியும் கடைவழி வாராது” என்று கடைபோகத் துறந்த மாமுனிவர். துறவின் தூய திருவுரு, பட்டினத்தார். பட்டினத்தார் வழித் துறவு சிறந்தால் உலகு சிறப்புறும். பட்டினத்தார் முற்றத் துறந்த முனிவரானாலும் உழைப்பின் அருமையை உணர்ந்திருக்கிறார்; உணர்த்துகிறார். இன்று துறவுக்கும், உழைப்பிற்கும் தொடர்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். உழைப்பே உலகத்திற்கு உயிர் நாடி.

ஞான வாழ்க்கைக்கும் தளராத உழைப்புத்தான் தேவை. உலகியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமே உழைப்பு தேவை என்று கருதக் கூடாது. ஞான வாழ்க்கைக்கும் இடையீடில்லாத, தொடர்ச்சியான, சோர்வில்லாத முயற்சி தேவை. அக நிலையிலும் தேவை, புற நிலையிலும் தேவை. ஞான வாழ்க்கையில் கடுமையாக உழைத்தால் இப்பிறப்பிலேயே, உயிர் நிலையிலேயே ஞானம் பெறலாம்.

வாழ்க்கையின் மையம் மனமே! மனத்தின் வழியே பொறி, புலன்கள் தொழிற்படுகின்றன. மனம் தூய்மையாக