பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர் பெருமை

79


சுந்தரர் பெருமையைச் சொல்ல (ւՔւգ-աոg/, இறைவனின் திருவாயால் "மேருவரையின் மேம்பட்ட தவத்தான்் என்று புகழப்பட்டார். கல்வியில் மேம்பட்ட சுந்தரர் எல்லாவற்றுள்ளும் இனிய கடவுளை “கற்ற கல்வியினும் இனியான்" என்றும், "பண்டைத் தமிழ் ஒப்பாய்” என்றும் வாழ்த்தினார். என்னே அவர் செந்தமிழ் ஆர்வம்! அவர் ஆராய்ச்சித் திறம் இக்கால வரலாற்று ஆராய்ச்சியாளரையும் பிரமிக்கச் செய்கின்றது.

சுந்தரரது காலம் சமயத்துக்கு மதிப்பளித்த நல்ல காலம். ஆனால், சமயத் தொண்டர்கள் நலிந்து வாடிய காலம். இன்றோ சமயத் தொண்டர்கள் நன்றாகத்தான்் இருக்கிறோம். ஆனால், சமயத்துக்குத்தான்் நல்ல நிலை இல்லை. சூழ்நிலை இப்படி மாறியது வருந்தத்தக்கது. சூழலை மாற்ற-உருவாக்க மனிதனால் முடியும். ஆகவே பொன் கேட்டு, பெண் கேட்டு, கண் கேட்ட சுந்தரரின் காலத்துச் சம்ய நிலையை உண்டாக்க நாம் உழைப்போம்.