பக்கம்:குப்பைமேடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ராசீ

அந்த அஞ்சல் பிரிக்கப்படாமல் இருந்தது.

என் ஆர்வத்தை வெளிக்காட்டாமல் அடக்கி இருந் தேன். அது அவள் மாஜி கணவரிடமிருந்து வந்தது.

இவர்கள் போக வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

-23

அவருடைய பையன் வாய் திறந்தான். எனக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். முடிவு செய்ய வேண்டுவது அவன்தான் என்று பட்டது.

அவன் துணிந்து கதாநாயகிக்கு உரிமை தந்து விட் டான். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் எந்தப் பிரச்சனையும் தீரும் என்பதை அறிந்து அவன் செயல்பட்டான்.

'நான் வீண் கவுரவங்களுக்கு மதிப்புத் தர வில்லை; காதல் கண்ணியமானதுதான்; வள்ளுவர் முதல் வைரமுத்து வரை இக்காதல்ைப் போற்றி இருக்கிறார்கள். காதல் உயிர்த் தத்துவம். இது மற்றையவற்றைப் போல் ஒரு பிரச்சனை அல்ல; வாழ்க்கை; மணக்கிறேன் என்று இணங்கிவிட்டுப் பின்வாங்க விரும்ப வில்லை.

தொழில் அவரவர் விருப்பத்தை ஒட்டியது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இது இன்றைக்குத் தேவையான புரட்சிதான். இந்த நாட்டில் தொழிலை மதிக்கக் கற்றுக் கொள்ளாதது பெரிய குறைதான்.

அவர்களை இழக்க வேண்டுமே என்பதற்காக நான்

விட்டுக் கொடுக்கவில்லை; அவர்கள் கொள்கையை மதிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/100&oldid=1114947" இலிருந்து மீள்விக்கப்பட்டது