பக்கம்:குப்பைமேடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

97

முடியும் என்பதற்கு இவர்கள் வாழ்க்கை எடுத்துக்காட்டாக அமையும். இது நாட்டுக்கும் வழி காட்டுவதாக அமையும்.

இந்த மண்ணை நேசிப்பது என்றால் இதில் எழுந்த இந்து சமயத்தை மதித்துத்தான் ஆக வேண்டும். நீங்கள் கிறித்தவர் என்பதால் வேறு பட்ட வர்கள் என்று நினைப் பதும் தவறு; இந்தப் பெண் உங்களோடு ஒட்ட முடியாது என்பதும் தவறு. பிறப்பால் நீங்கள் கிறிஸ்த்தவராக இருக் கல்ாம் என்றாலும் இந்த மண்ணின் கலாச்சாரத்தை நம் பிக்கைகளை மதித்துத்தான் ஆக வேண்டும்.

'அசைக்க முடியாத நம்பிக்கைகள் இவை; காதல் காரணமாக: அவள் விரும்பும் கணவன் காரணமாகத் தன் கலாச்சாரத்தை நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகப்பட வில்லை. பெண் அடிமைப்பட்ட காலம் மாறிவிட்டது. உரிமைக்குரல் எழுப்பும் காலம் இது. அவரவர் கொள் கைகள் நம்பிக்கைகள் மற்றவர்களை மாற்றக் கூடாது. மாற்ற நினைப்பது மடமையும் ஆகும்” என்று முடித்தாள்

என் வீடு ஒரு கருத்தரங்காக மாடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளே அனைவரும் உண்டு பசி யாறச் சமையல் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை என் மனைவி குழந்தையோடு வந்த புது நாள் தயாளன் தன் துணையை அழைத்து வந்த நன்னாள்; எதிர்வீட்டு இளந் தம்பதிகள் இணையும் பொன்னாள்; அதனால் விருந்து ஒன்று தருவது தக்கது என்றே பட்டது. மும்முரமாக அடுப்பு எரிந்து தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. நல்ல காலம் காஸ் கைகொடுத்து இருக் கிறது என்று தெரிந்து கொண்டேன். சில சமயம் அது கழுத்து அறுத்து விடுகிறது. சரியான சமயத்தில் அது ஒத் துழைப்புத் தருவது இல்லை இப்பொழுது எல்லாம் ஒழுங் காக இயங்கிக் கொண்டு வருகிறது. பெரியவரின் துணைவி யாரையும் சாப்பிட அழைத்தேன். அவர்கள் அதிகம் பேச வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/99&oldid=1114946" இலிருந்து மீள்விக்கப்பட்டது