பக்கம்:குப்பைமேடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ராசீ

முதியோர் சிலர் அந்த இல்லத்தில் பணி செய்வதாகக் கூறுகிறார்கள். இவர்களுக்கு அங்கு நிறையப் பணிகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

முதியோர் இல்லம் என்றால் முதியோருக்குப் பாது காப்புத் தரும் இல்லம் மட்டும் அல்ல; முதியோர் பணி செய்ய வாய்ப்புத்தரும் இல்லமாகவும் இருக்க வேண்டும்.

முதியோர்கள் என்றால் அநாதைகள் என்ற கருத்தோ, பிள்ளைகளின் பராமரிப்பை எதிர்பார்ப்பவர்கள் என்ற கருத்தோ மிகவும் பிற்போக்கானது. மனிதன் இறுதி மூச்சு இருக்கும்வரை யாருக்காவது பயன்பட வேண்டும்: பணி செய்ய வேண்டும். அதில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் இதுதான் அவர்கள் செய்யத் தக்கது' என்று கூறி முடித்தான்.

கற்றவன் அதனால் அவன் தெளிவாகச் சிந்திக்கும் இயல்பு அவனிடம் இருந்தது. அவன் எங்கள் அனைவரை யும்விட மிகவும் உயர்ந்து விட்டான் என்பதை அறிய முடிந்தது.

மணம் முடிவு செய்யப்பட்டது.

“நீ உன் உறுதியை நிறைவேற்றி விட்டாய்” என்று பெரியவர் பாராட்டினார். மங்கையர் திலகம் வெற்றி காட்டினாள்.

“எனக்கு இந்தத் தத்துவ இலக்கணங்கள் எதுவும் புரியாது. என் மகன் யாரை விரும்புகிறாளோ அவள்தான் என் மருமகள்” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார் அவர் துணைவியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/102&oldid=1115424" இலிருந்து மீள்விக்கப்பட்டது