உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

129

ஒட்டைகள் என்று எடுத்துச் காட்டிவிடும். பல்லைக் கடித்துக் கொண்டு இருந்திருக்கலாம். அவளுக்குப் பொறுமை இல்லை, இதெல்லாம் நான் எப்படிச் சொல்ல முடியும். அவளுக்குப் புத்தி இருக்கணும்.

ஆரம்பத்திலே சொத்து கொண்டு வரலேன்னு வருத் தப்பட்டது உண்டு. அப்புறம் என்ன செய்யறது. அவங்க குடும்பமே தக்க வருவாய் இல்லாமல் ததிங்கிண தோம் தாளம் போடுது.

எங்கப்பாதான் தவறாக நடந்துகிட்டாரு, அடிக்கடி வைரத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பாரு, 'உங்களுக்கு எதற்கு இவ்வளவு வைரம்?" என்று கேட்பார்.

வைரம் உடைய நெஞ்சு அவளிடம் இருந்தது, வைரம் என்ற கல்லைப் பற்றி அவள் அறிந்தது இல்லை. இங்கே வந்து பிறகு ‘காது' என்பது அதற்காகத் தான் படைக்கப் பட்டது என்று எங்கள் வட்டாரத்தில் அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது.

அவள் காதில் வெள்ளைக்கல் வைத்த கம்மல்தான் போட்டிருந்தாள். 'டேய் உனக்குத் தெரியாது, அது வைரக்கல் தான்' என்று அவர் சாதிப்பார். என்னைப் பொறுத்தவரை அது இல்லாமல் இருந்தாலே அவள் அழகாக இருக்கிறாள் 'பொல்லாத பேச்சு எதற்கு' என்று பொருமுவேன்.

'வாழ மறுத்தால் விவாகரத்து செய்து கொள்ள லாமே' என்றேன். அவனால் அதைத் தாங்கி கொள்ள முடியவில்லை, கட்டிய மனைவியை விட்டுக் கொடுக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/131&oldid=1115577" இலிருந்து மீள்விக்கப்பட்டது