பக்கம்:குப்பைமேடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

131

கேள்வி. எப்படியும் ஆசிரியர் தொழில் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகிவிட்டது. பெற்ற தாயும் பிறந்த வீடும் அவளுக்கு உற்ற கணவன் வீட் டைவிடப் பெரிதாக ஆகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன். பிள்ளைகளைப் போலவே பெண்களும் பிறந்த வீட்டை வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி விட்டனர்.

ஆண்கள் தாம் தன் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு ஏற்று இருக்கின்றனர். இன்று பெண்களும் அந்த நிலைக்கு வந்து விட்டனர், பாரத நாட்டுப் பண்பு மாறிக் கொண்டு வருகிறது.

கணவனின் சுகதுக்கங்களைப் பங்கிட்டுச் கொள்வது பெண்ணின் கடமை என்று அவர்களுக்கு இதுவரை அளிக் கப்பட்டது. ஆண் பிள்ளைகள் பெற்றோரைப் பாதுக்ாக் கும் கடமையை மறந்து விடுகின்றனர், பெண்கள் துணிந்து சுமைதாங்கிகளாக மாறுகின்றனர். அதன் விளைவு இது' என்று வாதித்தான்.

எனக்கு ஆறுமுகத்தைத் தெரியும்; அவர் பெண்ணின் உதவியை உழைப்பை நாடுபவர் அல்ல; உங்களுக்கு வாரித் தரவில்லை என்று கு,ை படலாம், ஆனால் அவர் தான் மகளின் உழைப்பில் சார வேண்டும் என்று நின்பப் வர் அல்ல; நேற்றுவரை அவர் ள்ன்னிடம் முறையிட்டார்.

'தவறுதல்கள் நடந்துவிட்டன, என் மகள் அவன் வீட்டைப் போய் சேரவேண்டும் அதுதான் என் நோக் கம்' என்று அடித்துப் பேசினார், அதே சமயம் அவரும் சட்டத்தின் மூலம் நீங்கள் மிரட்டியது தவறு என்று கூறுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/133&oldid=1115579" இலிருந்து மீள்விக்கப்பட்டது