பக்கம்:குப்பைமேடு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

135

இல்வம்மையார் எனக்கு அறிவித்தார்கள், ஒரு சிலர் அப்படி நடந்து கொள்ளலாம்; மொத்தத்தில் பெண்களை இவ்வாறு கூறிப்புண்படுத்தக் கூடாது என்பதை அறிந் தேன்; மாமியார் கொடுமை' என்றுதான் கேள்விபட் டிருக்கிறேன்; தவிர மாமனாரின் கொடுமை என்று கேள்வி பட்டது இல்லை.

இவர்கள் முற்றிலும் மாறுவட்டவர்களாக இருக் கிறார்கள்; ஒருவருக்குப் பணம் சேர்வதும் சேராததும் அவரவர் சூழ்நிலையை ஒட்டியது; பணம் படைத்தவர் கூடுதலான வசதிகளோடு வாழலாம், கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கலாம். ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் அவர்கள். ஆனால் ஒடிச் கொண்டே இருக்க முடியாது.

'வசதியோடு வாழ்கிறவர் எப்பொழுதும் மற்றவர் களைவிட்டு ஒதுங்கி வாழ நினைக்கிறார்கள். வசதிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் கருத்துச்செலுத்துவர்.அதனால் என் மருமகளைச் சில சமயம் வெறுப்பது உண்டு. அவளுக்குச் சோற்றுக்குத் துணிக்கு எதற்கும் இங்குக் குறை இல்லை. அவள் ஏதோ வீண் பிடிவாதம் பிடிக்கிறாள். நான் இருதலைக் கொள்ளி எறும்புபோல் எந்தப்பக்கமும் சார முடியாமல் ஒரம் கட்ட வேண்டியுள்ளது. இது என் நிலைமை' என்று விளக்கினார்கள்.

-4

&

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு புது மனிதர் வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/137&oldid=1115584" இலிருந்து மீள்விக்கப்பட்டது