பக்கம்:குப்பைமேடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

159

பெற்றிருக்கிறாள். கடந்த கால வாழ்க்கைக்கு அவள விடைகள் சொல்லிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. புதிய தேர்வுக்கு அவள் படித்துக்கொண்டு இருக்கிறாள்

'இருந்தாலும் அவன் வேலைக்காரியோடு விளையா டியது மறக்க முடியாது; மன்னிக்க முடியாது' என்று அவர்கள் சார்பில் பேசினேன் சம்பிரதாயத்துக்காக.

'நீங்கள் பத்தாம்பசலியாக இருக்கிறீர்கள்; அதைப் பெரிதுபடுத்துவதுதான் தலறு. இன்று தவறுவது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட சம்பிரதாயம்; தவறுகளை நினைத்துக் கொண்டு சங்கீதம் பாடியது பழைய காலம் தவறு செய்யாதவர்களை மகான்கள் என்று மதித்தது அந்தக் காலம்; இது மனித இயல்பு; இதைக் கண்டும் காணாமல் போவது நாகரிகம் என்று வாழக் கற்றுக் கொள்வது இந்தக்காலம்: ஐந்து புலன்களை அடக்கி ஆள்வது வெற்றி என்று அதற்காக அழுது அழுது தொலைந்தவர்கள் ஞானிகள் எனப்பட்டனர்; புலன்கள் ஐந்தையும் அறிவு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி நல்வாழ் வுக்கு வழி கோலுவது இந்தக் காலம்;

புலன்கள் ஆற்றல் உள்ளவை; வேகம் கொண்டவை; சில சமயம் பாதை தவறி விடுதல் உண்டு. அதற்காக ஒருவரை நோவது அறியாமை; என் மகளும் அறிவுடை யவள்; அவனைத் தன் உடை மையாக்கக்கருதியது இல்லை. ஏதோ ஒன்று இழந்து விட்டதாக ஒப்பாரி வைத்து நாடகம் நடத்தும் அறியாமை அவளிடம் இல்லை. அது அவன் சொந்த விவகாரம். அதுகூட அவள் இங்கு வந்து சொல்லவில்லை; நான் அங்குச் சென்றபோது கேள்விப் பட்ட செய்தி அது. அது அவனை வெறுப்பதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/161&oldid=1115616" இலிருந்து மீள்விக்கப்பட்டது