பக்கம்:குப்பைமேடு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

163

'இவரை இந்த அச்சுத் தொழில் வேண்டாம் என்று தலை தலை அடித்துக் கொண்டேன். கேட்டாரா? இருந்த சொத்து எல்லாம் மெல்ல மெல்லத் தொலைத்து விட்டார்.

வியாபாரம் ஏதாவது செய்திருந்தால் எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம்.

பழைய பேப்பர் கடை வச்சிருந்தால்கூடக் குப்பை காகிதம் வாங்கிக் குபேரன் ஆகி இருக்கலாம். கோணிப் பைக் கடை வைத்திருந்தால் ஏணி ஏறி மாடி கட்டி இருக் கலாம். சாணி தட்டி விற்றவர்கள் எல்லாம் காணி நிலம் வாங்காமலா இருக்காங்க.

சுடுகாட்டிலே இந்தச் சாணி தட்டிய வறட்டிக்கு என்ன சிராக்கி தெரியுமா? அய்யர் பையன் ஒருத்தன் வெட்டி யான் வேலைக்கு விண்ணப்பம் போட்டுத் தனக்குக் கொடுக்கணும் என்று உச்ச நீதி மன்றத்தில் உச்சி வரை போய் இருக்கிறான். கேட்டால் அந்தத் தொழிலிலே மச்சி வீடு கட்ட முடியும் என்கிறான். இந்த அச்சுத் தொழிலிலே என்ன மிச்சத்தைக் கண்டோம்.

புத்தகம் வருது: அறிவு வளருது; அச்சடிக்கும் அச்ச கத்துக்கு என்ன கிடைக்கும்? பிழை இல்லாமல் உரிய நேரத்தில் அச்சிட்டுத் தந்தால் உரிமையாளர்க்குச் சில வரி களில் நன்றியுரை எழுதுகிறார்கள். காலத்தில் ஒரு நூல் அச்சிட்டுத் தந்தால் அதை மிகவும் பாராட்டுகிறார்கள், இதைத்தான் நாங்கள் கண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/165&oldid=1115620" இலிருந்து மீள்விக்கப்பட்டது