பக்கம்:குப்பைமேடு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

ராசீ

நூல் எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டும் பரிசும் கிடைக்கின்றன. கலைமாமணி என்று கூறி அவர்கள் தலை யைக் கணக்க வைக்கிறார்கள். அவர்களுக்குக் கலை இருக் கிறதோ மாமணி வந்து சேருகிறது. செக்கு மாடு மாதிரி இந்த இருட்டறையில் ஒர் உலகத்தைப் படைத்துக் கொடுக்கிறார்களே இந்த மக்குகளை யார் கவனிக்கிறார் கள்?

கட்டிடத் தொழிலாளி இன்று எண்பது தொண்ணுாறு எட்டிப் பிடிக்கிறான். இவர்கள் வாரத்துக்கு இரு நூறு கூட வாங்க முடியவில்லை. வட்டிக்குக் கடன் வாங்கி வாடகை கட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள். அதிகம் கேட்கிறார்கள். அவர்களுக்கே தெரிகிறது போன் பில் கட்ட முடியாமல் அதன் குரல் வளை இறுக்கப்படுகிறது என்று.

புத்தகம் அச்சிடுபவர் தந்தால்தானே அவர்கள் கூலியை உயர்த்த முடியும்! அவர்களே கடைக்காரர்களி டம் புத்தகங்களைப் போட்டு விட்டு அசோகவனத்துச் சீதையை மீட்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.

நூல் வெளி வந்தால் போதும் என்று அவர்கள் கடை களில் போடுகிறார்கள். கடைக்காரன் காசு உடனே தருவதில்லை. முதல் இல்லாத வியாபாரம், அவர்கள் ஒவ் வொருவரும் வள்ளல் இராமனாக மாரி விடுகிறார்கள். 'இன்று போய்க் காசுக்கு நாளை வா' என்று சொல்லி அனுப்புகிறார்கள்; இவ்வளவு இருந்தும் பிடிவாதமாக நூல் அச்சிடுகிறார்கள் சிலர்; அதுதான் வியப்பாக இருக் கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/166&oldid=1115622" இலிருந்து மீள்விக்கப்பட்டது