பக்கம்:குப்பைமேடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

ராசீ

அவர்கள் வங்கிக் கணக்கு வறட்சி ஆகிவிடும்; அவற்றை எடுத்துக் கொண்டு போகாமலேயே எங்கள் வீட்டில் இடத்துக்கு நெருக்கடி உண்டாக்கி விடுவார்கள். ஒரு சிலர் பாதி தந்துவிட்டு மீதி தருவது, விழலுக்கு இறைக் கும் நீராகக் கருதி நிறுத்திவிடுவார்கள். ஒரு சிலர் அச்ச டித்து முடித்தபின் தன் புத்தகம் விலை போகாது என்றும் நிச்சயத்து கொண்டு இந்தப் பக்கம்கூடத் திரும்ப மாட்டார் கள். இந்த அவலங்களை எல்லாம் இந்தத் தொழிலில் நாங்கள் கண்டிருக்கிறோம்' என்று தம் கணவரின் தொழிலை விமரிசிக்கத் தொடங்கினார்கள்.

பள்ளிக்கூடப் பாட நூல்கள் பரவலாக விற்கக் கூடிய நூல்கள் என்றாலும் அச்சகத்தில், அவர்கள் தரு வது இல்லை. இப்பொழுது ஆஃப் செட் அச்சு முறை வந்துவிட்டது. அது அசுர வேகத்தில் நூல்களை அச்சிட் டுத் தருகிறது. அவர்கள் கூட ஏகப்பட்ட கடன் வாங்கி விட்டு டியூ கட்டுவதே தன் வியூ' வாக மாறிவிடுகிறார் கள். அதைக் கட்டி முடிப்பதற்குள் அந்த இயந்திரங்கள் கால் விலைக்குக்கூட விற்க முடிவதில்லை. டிக் லோன் வாங்கியதற்கு அது தரும் 'கிக் குகளைத் தாங்காமல் விக்கிக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது என்று பூதாகாரமாக வளர்ந்து வரும் புதிய அச்சு இயந்திரத் தொழிலைப் பற்றியும் அவர்கள் அறிந்தவரை அறிவித்தார்

ᏯᏱ ❍Ꭲ .

'இந்தத் தேய்ந்துவிட்ட இயந்திரங்களை வாங்கக் காய்ந்தவன் யாராவது இருக்கிறானா பார்' என்கிறார். 'எடைக்குப் போடுவதைத் தவிர இதற்கு வேறு விடை கிடையாது' என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/168&oldid=1115625" இலிருந்து மீள்விக்கப்பட்டது