பக்கம்:குப்பைமேடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

187

'அதுவாவது செய்தேனே? அதை நீங்கள் மதிக்க வேண்டும்'.

'சட்டப்படி நீங்கள் செய்தது தப்புதானே?"

'உங்கள் இஷ்டப்படி நீங்கள் செய்து கொள்ளலாம்'.

'பிறகு நீங்கள் நஷ்டப்படும்படி ஆகிவிடும்” என்று மிரட்டினார்.

பதிவு செய்வதற்கு உரிய தொகை கட்டி விட்டேன்' என்றேன்.

'அது அரசாங்கத்திற்குச் சேர்ந்து விட்டது' என்றார்.

மரியாதையாக வெளியே போ' என்றேன்.

அவர் கருகிக் கொண்டே இடத்தைக் காலி செய்தார். தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய அமர்த்தப்பட்ட தொண்டர்கள் தொல்லை தந்து கொண்டிருந்தார்கள். எரிச்சல் தாங்க முடியவில்லை.

-4

அவன் மறுபடியும் பழைய நண்பன். விட்ட இடத்தி லிருந்து தன் கதையைத் தொடர்ந்தான்.

'யார் சார் அவன்? அன்று உங்கள் வீட்டைப்பற்றி நலம் விசாரிக்க வந்தானே?' என்று மரியாதை கலக்காமல் கேட்டார்.

'கார்பரேஷன் வரி விவகாரம்' என்றேன்.

"எப்படிசார் முடிந்தது?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/189&oldid=1116102" இலிருந்து மீள்விக்கப்பட்டது