பக்கம்:குப்பைமேடு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

ராசீ

அவள் பயணம் உல்லாசமாக முடிந்தது. மந்தகாச மான வாழ்க்கையை முடித்துக் கொண்டு கோடை விடு முறைக்கு வீடு திரும்பும் மாணவனைப் போல அவள் தன் தாயகம் வந்து சேர்ந்தாள்.

கூட்டத்தில் ஆண்டறிக்கை செயலாளர் என்று சொல்லக் கூடியவர் எழுதிப் படிப்பது வழக்கம். வந்தவள் தன் புகுந்த வீட்டு ஆண்டறிக்கையை எழுதி வைக்காமலே வரிசைப்படுத்தி அடித்தல் திருத்தல் இல்லாமல் அழுகை கலவாமல் சொல்லி முடித்தாள்.

மூன்றாவது ஆள் வந்திருப்பதையும் அவர்கள் பார்க்க வில்லை. மற்றவர்களுக்குக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது. இவள் ரிட்டர்ன் டிக்கெட்' வாங்காத குறை தான். இவர்கள் அடிக்கடி வருவது அழகிய சரித்திரமாய் அமைந்து விட்டது. மற்றவர்களுக்குக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது. கேட்பதற்கு நான் தான் கிடைத்தேன். அவர்கள் கொட்டிக் கொள்ள நான் கேட்டுக் கொண்டி ருந்தேன் கோயில் சிலையைப் போல. அந்த வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது" என்று என் அபிப்பிராயத் தைச் சொன்னேன்.

இப்படி வராததால்தான் மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது என்று பதில் கிடைத்தது. அவள் தன் கணவனி டத்தில் சிறிது கூட வெறுப்புக் காட்டாமலிருப்பது வியப்பைத் தந்தது. இன்பத்தையும், துன்பத்தையும் சம மாக எடுத்துக் கொள்வார்கள் என்று நூல் படைத்தவர் கள் கிறுக்கி இருப்பதைப் படித்ததுண்டு; பார்த்ததில்லை. இது இவர்களுக்குப் பழகிப்பழகி அமைந்து விட்ட பண் பாகி விட்டது என்பது தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/206&oldid=1116122" இலிருந்து மீள்விக்கப்பட்டது